காலை நடைபயிற்சியின் நன்மைகள்...!
காலை நடைபயிற்சி அன்று நாள் முழுவதும் அதிக ஆற்றலை தருகிறது.
மேலும் நாள் முழுவதும் கவனம் செலுத்தும் திறனையும் மேம்படுத்த உதவுகிறது.
காலையில் நடைபயிற்சி செய்வது மூலம் உங்கள் எடையை எளிதாக குறைக்கலாம்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடப்பது இதய நோய் ஆபத்தை 19 சதவிகிதம் குறைக்க உதவுகிறது.
காலையில் நடைபயிற்சி மனநிலையை மேம்படுத்தவும் சோர்வை குறைக்கவும் பயன்படுகிறது.
நடைபயிற்சி உங்கள் கால்களில் உள்ள தசைகளை வலுப்படுத்த மற்றும் இரவில் நன்றாக தூங்க உதவுகிறது.
காலையில் நடைபயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள வெப்பநிலை குறைக்கப்படுகிறது.