யானைகளின் பாதுகாப்பிற்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
யானைகளை பாதுகாக்க வேண்டிய அவசர தேவையை இந்த நாள் நினைவுபடுத்துவதுடன், யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க வலியுறுத்துகிறது.
இந்த நாளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
யானை குறித்த தகவல் : இது சுமார் 7 அடி முதல் 12 அடி உயரம் வரை வளரக்கூடியது. சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான எடை கொண்ட பெரிய விலங்கினமாக உள்ளது.
ஆசிய பெண் யானைகளுக்கு தந்தம் இருக்காது. ஆனால் ஆப்பிரிக்க பெண் யானைகளுக்கும் தந்தம் இருக்கும். யானையின் 2 தந்தங்களும் சுமார் 90 கிலோ எடை வரை இருக்கும்.
கூர்மையான கண் பார்வையும், மோப்பம் மற்றும் ஞாபக சக்தி கொண்டது. மேலும் ஒருநாளைக்கு தீவனமாக சுமார் 200 கிலோ முதல் 250 கிலோ வரை சாப்பிடும். அதேபோல், 150 முதல் 200 லிட்டர் வரை தண்ணீரும் குடிக்கும்.