உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் திறன், சாதனைகள் மற்றும் சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ம் தேதி சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள், இளைஞர்களின் கொண்டாட்ட தினமாக மட்டுமல்லாமல், இளைய சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது.
இளைஞர்களுக்கு அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க இந்த நாள் அதிகாரம் அளித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச இளைஞர்கள் தினத்துக்கு ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் இருக்கும். அது பல்வேறு வழிகளிலும் இளைஞர்களை வளர்ப்பது மற்றும் முன்னேற்றுவது என்பதை வலியுறுத்தும்.
இந்தாண்டுக்கான கருப்பொருள், ‘கிளிக்குகள் முதல் வளர்ச்சி வரை – நீடித்த வளர்ச்சிக்கு இளைஞர்களின் வழிகள்’ என்பதாகும்.
இந்த கருப்பொருள், டிஜிட்டலைசேஷன் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான வழியை கண்டுபிடிப்பது, இந்த மாற்றத்திற்க்கான பணியில் இளைஞர்களின் முக்கிய பங்களிப்பை வலியுறுத்துகிறது.
இளைஞர்கள் இந்த நாளை மாநாடுகள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், பயிற்சி பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ஊக்கப்படுத்தும் கூட்டங்கள் நடத்தி இந்த நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.