இன்று பிறந்தநாள் காணும் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கடந்து வந்த பாதை..!
உத்திரபிரதேசத்தில் பிறந்தவர் முகமது ஷமி. இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
ஜனவரி 2013 -ல் டெல்லியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்காக இந்தியாவின் (ODI) அணியில் சேர்க்கப்பட்டார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதே ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டார்.
2012-13 ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஷமியின் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விரைவான முன்னேற்றம் ஏற்பட்டது.
2015 உலகக்கோப்பையில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
ஒருநாள் போட்டிகளில் விரைவாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
2011 ஐ.பி.எல் -ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
2022 ஐ.பி.எல் -ல் குஜராத் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தனர். இதில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார்.
2023 -ல் குஜராத் அணிக்காக 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை எடுத்து ஊதா நிற தொப்பியை வென்றார்.
முகமது ஷமி 9 ஜனவரி 2024 அன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கையில் அர்ஜுனா விருது பெற்றுள்ளார்.