இன்று உலக புற்றுநோய் தினம்.. புற்றுநோயைப் பற்றி தெரியவேண்டியவை..!
உயிருக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
புற்றுநோய் பாதிப்பானது மார்பகம், வாய், கர்ப்பப்பை, இரைப்பை, நுரையீரல், ரத்தம் என உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும். பெரும்பாலும் இது உடனடியாக வீரியம் அடைவதில்லை. படிபடியாக வீரியம் அடைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
ஆரம்பகாலத்தில் கண்டறிந்து நோய்த்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். புற்றுநோய் பாதிப்புக்கு மரபணு முக்கிய காரணமாக இருந்தாலும், வாழ்க்கை முறையும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக 2000-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, பிப்ரவரி 4-ம் தேதியை 'உலக புற்றுநோய் தினமாக' அறிவித்தது.
புற்றுநோய்க்கான அறிகுறிகள்: எதிர்பாராத எடை இழப்பு.