இன்று உலக தேங்காய் தினம் : தேங்காய் தினத்தின், வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்..!
ஒவ்வொரு ஆண்டும், உலக தேங்காய் தினம் செப்டம்பர் 2 அன்று கொண்டாடப்படுகிறது.
1969-ம் ஆண்டு தென்னை சாகுபடி செய்யும் நாடுகளை உள்ளடக்கிய, 'ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம்' (APCC)நிறுவப்பட்டது.
ஐ.நா. அமைப்பின் கீழ் நிறுவப்பட்ட இந்த ஆசிய பசிபிக் தேங்காய் சமூகத்தின் மாநாடு 1998-ம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், தேங்காய் சமூகம் நிறுவப்பட்ட செப்டம்பர் 2-ம் தேதியை, உலக தேங்காய் தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கென்யா மற்றும் வியட்நாம் ஆகியவை APCC இல் உறுப்பினர்களாக உள்ள சில நாடுகளாகும்.
உலக தேங்காய் தினம் விவசாயிகள் மற்றும் தென்னை வளர்ப்பு வணிகத்தில் பங்குதாரர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் தேங்காய் பயன்பாட்டை ஊக்குவித்தல், தென்னை வளர்ப்பு முறைகள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் தேங்காயின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
தேங்காயின் நன்மைகள் : தேங்காய் சுவையானது. தேங்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.
வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன...மேலும் பல