இன்றைய ராசிபலன் - 12.02.2025

மேஷம்: பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
ரிஷபம்: தாய்வழி சொத்து வந்து சேரும். வேலை கிடைக்கும். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். உத்யோகத்தின் பொருட்டு நீங்கள் பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும்.
மிதுனம்: புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.செரிமானக் கோளாறு, முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள்.
கடகம்: புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்: சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பார்வைக் கோளாறு நீங்கும். ஆனால், பல் வலி வந்துபோகும். நட்பு வட்டம் விரிவடையும்.
கன்னி: அண்ணன்,தம்பிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வருமானம் உயரும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். தங்கள் பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்.
துலாம்: கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.
விருச்சிகம்: வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். தொண்டை புகைச்சல் அதிகமாகும். அமைதியாக பேசாமல் இருப்பது உடல் நலத்திற்கு நன்மை தரும்.
தனுசு: இன்று பூராடம், உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழ்ப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.
மகரம்: கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். தடைகளெல்லாம் நீங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். எதிர்க்கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும்.
கும்பம்: மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கம் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். முக்கியமான விசயங்களில் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.. உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிலருக்கு புதுவேலை கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். அரசால் ஆதாயம் உண்டு
மீனம்: வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ‘பிரபலங்கள் உதவுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனைவி வழியில் உதவிகள் உண்டு.