மேஷம்: தீர்க்கயாத்திரை மேற்கொண்டு மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். தம்பதிகளின் ஒற்றுமைக்கு குறையிருக்காது. வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். உடல் நலம் சிறக்கும்.
ரிஷபம்: தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு பலிக்கும்.
மிதுனம்: பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். தள்ளிப் போன வெளியூர் பயணம் இன்று செல்ல ஆயத்தமாவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.
கடகம்: பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை நீங்கும். கவலை வேண்டாம். வாங்கிய கடனை விரைவில் அடைப்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு வேலையை முடிப்பீர்கள்.
சிம்மம்: வீட்டில் நிம்மதி கிடைக்கும்.பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். பணவரவில் தாமதம் இல்லை. வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும்.
கன்னி: திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அலைச்சல் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும்.
துலாம்: வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் தங்களின் பொருளாதாரத் தேவையை பூர்த்திசெய்வார்கள். குடும்பத்தில் நீண்ட காலமாக நிறைவேற்ற வேண்டிய கடமையை இன்று முடித்துவிடுவீர்கள். விருந்து விழா என்று சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்: குறுகிய தூர பயணங்கள் நன்மையை தரும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும். ஒரு சிலர் சில கிளைகளை துவங்குவர். தேகம் பளிச்சிடும். நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். சில்லரை வியாபாரம் லாபம் தரும்.
தனுசு: தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். மாணவர்களுக்கு தாங்கள் நினைத்த கல்லூரிகளில் சேருவதற்கு வழிகிடைக்கும். கடனின் வட்டித்தொகையை அடைத்து விடுவீர்ள்.
மகரம்: அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வேலைச்சுமை இருக்கும். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
கும்பம்: தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.
மீனம்: செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சித் தரும் நல்ல செய்திகள் கிடைக்கும். பிரபலங்களின் வீட்டில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும். சில்லரை வியாபாரிகள் வியாபாரத்தில் கவனம் தேவை.