இன்றைய ராசிபலன் - 20.02.2025!

இன்றைய ராசிபலன் - 20.02.2025!

Published on
மேஷம்: தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
ரிஷபம்: மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது.
மிதுனம்: உத்யோகம் சாதகமாக செல்லும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். புதிய திட்டங்களை மனதிற்குள் அசைபோடுவீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் விலகும்.
கடகம்: ஆன்மீக சிந்தனை மேலோங்கும். விரைவில் தங்கள் படம் வெளியாகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர்.
சிம்மம்: வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
கன்னி: வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். மாணவர்கள் படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர்.
துலாம்: உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள்.
விருச்சிகம்: உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் பாராட்டுவர். வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். வியாபாரிகளின் தங்கள் தொழிலுக்கு ஏற்ப வங்கிக் கடன் கிட்டும்.
தனுசு: எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கழுத்து வலி வந்து நீங்கும். பழைய வாகனத்தை விற்கும் எண்ணம் தோன்றும்.
மகரம்: கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நிர்வாகத் திறமையால் பதவி உயரும். மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். எதிரிகளின் தொல்லைகள் அகலும்.
கும்பம்: திடீர் வெளியூர் பயணம் உண்டு. உறவினர்களை பார்த்து மகிழ்வீரகள். உடல் நலம் சிறக்கும். வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். வியாபாரம் சூடு பிடிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டு.
மீனம்: உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். தோல்வி பயம் நீங்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com