இன்றைய ராசிபலன் - 22.01.2025!

மேஷம்: பழைய பாக்கி கைக்கு வரும். மனையில் இருந்த சிக்கல் விலகும். புதிய கிளைகளை துவங்குவர். பொது தொண்டில் புகழ் பெறுவீர்கள். தம்பதிகளின் மனஸ்தாபம் நீங்கும். சகோதரவழியில் பிரச்சினை வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் சேரும்.

ரிஷபம்: வழக்கறிஞர்களுக்கு வெற்றி குவியும். உறவினரால் நன்மை உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பர். உத்யோகத்தில் அமைதி நிலவும். மகிழ்வான மணவாழ்க்கை அமையும். சகோதரர்களின் கருத்து வேற்றுமை மறையும். கலைஞர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.

மிதுனம்: மேலதிகாரிகளிடம் அமைதி காக்கவும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களின் குறிக்கோள் நிறைவேறும். பூர்வீக சொத்து கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும்.

கடகம்: பிள்ளைகளால் பெருமை கூடும். விற்பனை கூட்ட சலுகைகளை தருவீர்கள். வழக்கில் திருப்பம் காணலாம். சகோதரிக்கு திருமணம் செட்டாகும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பண வரவில் பற்றாக்குறை இருக்கும். பூர்வீக சொத்தால் பயன் பெறுவீர்கள். மாணவர்கள் பாராட்டப்படுவர்.

சிம்மம்: புதிய ஆடை, அணிமணிகள் சேரும். நினைத்தவாறே வேலை கிடைக்கும். நட்பு கசக்கும். பிள்ளைகளுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். கலைஞர்களு வாய்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும், உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. உடல் ஆரோக்கியம் சீராக இருந்து வரும்.

கன்னி: உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிரிகள் விலகிப் போவர். உடல்நிலை சரியாகும். வெளியூர் சென்று வருவீர்கள். இளைஞர்களுக்கு உத்யோகம் கிடைக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் விலகும்.

துலாம்: தேவைக்கேற்ப பணம் வரும். தம்பதிகள் புரிந்து கொள்வர். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். மருத்துவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். பேச்சில் இனிமை கூடும். சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும்.மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்: தம்பதிகள் சேமிப்பினை கூட்டுவர். பணவரவில் சிக்கல் இல்லை. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பைசலாகும். வெளியிடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டி தொடரும். நல்லவர் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பர்.

தனுசு: வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். திருமணம் கூடி வரும். எதிரிகளின் வலிமை குறையும். தாமதித்த அயல்நாட்டு பயணம் சாதகமாகும். தொழில் நஷ்டத்தை ஈடுசெய்வீர்கள். வெகுநாள் தலைவலி தீரும். உயர்கல்வி முயற்சிகள் கூடி வரும். கடன் சுமை குறையும்.

மகரம்: தொழில் அதிபர்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். உணவில் கட்டுப்பாடு தேவை. நல்ல வரண் அமையும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்களுக்கு மதிப்பு கூடும். தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும்.

கும்பம்: மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். பணப் புழக்கம் திருப்தி தரும். உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்தில் மதிப்பு கூடும். விற்பனை பிரதிநிதிகளுக்கு ஆர்டர்கள் குவியும். நிர்வாகத் திறன் பளிச்சிடும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் உடல் நலம் தேறும்.அரசு காரியங்கள் முடியும்.

மீனம்: உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.