இன்றைய ராசிபலன் - 05.02.2025!

மேஷம் : பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீர்படும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிரிகள் விலகுவர். பணவரவில் பஞ்சமில்லை. இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர்.
ரிசபம் : பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். திருமணம் நடந்தேறும். உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.
மிதுனம் : உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். மகன், மகள் திருமணத்தை தடபுடலாக நடத்துவர். வீடு மனை வாங்கும் போது ஆவணங்களை சரிபார்ப்பது நல்லது. பண வரவு தாமதப்படும். மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவர்.
கடகம் : கணவருடன் கருத்து மோதல்களும் வரக்கூடும்.அனுசரிப்பது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.
சிம்மம் : பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. புதியவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மறுக்காமல் செய்து கொடுப்பீர்கள்.
கன்னி : அஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
துலாம் : மனைவி வழியில் உதவிகள் உண்டு. பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம் : திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்து விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி வந்து நீங்கும். பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழைய பாக்கி வசூலாகும்.
தனுசு : மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வேலைகள் தள்ளிப் போகும். காதல் கண் சிமிட்டும். உறவினர்கள் வருகை உண்டு. பெற்றோர்களின் உடல் நலம் தேறும்.
மகரம் : உறவினர்களால் நன்மை உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். உடல் வலிமை உண்டாகும்.
கும்பம் : பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பெற்றோரின் கனவு பலிக்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர்.
மீனம் : தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். முகம் வசீகரம் அதிகமாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.