இன்றைய ராசிபலன் - 06.02.2025!

இன்றைய ராசிபலன் - 06.02.2025!

Published on
மேஷம் : கணவர் வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டு. தொழில்முனைவோருக்கு தேவைப்பட்ட பணம் வங்கியில் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல ஒரு துணை அமையும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. விரும்பியப் பொருட்களை வாங்குவீர்கள்.
ரிஷபம் : குடும்பத்தலைவிகளுக்கு வீட்டில் தங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். பயணங்களின் போது தலைகவசம் அணியவும் மற்றும் செல்போன் பேச வேண்டாம். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் கொள்கையுடன் செயல்படுவர். வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு.
மிதுனம் : மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ப ஊதியம் உண்டு. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும். வீட்டில் அமைதி ஏற்படும். கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பெரிய ப்ராஜக்ட் கிடைக்கும்.
கடகம் : உடல் நலம் பளிச்சிடும். வாகனத்தில் கவனம் தேவை. சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். வெளியூர் பயணம் நேரிடும். வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும்.
சிம்மம் : தம்பதிகளிடையே இருந்து வந்த சண்டை சமாதானமாகும். நண்பர்களிடையே அன்பு பலப்படும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் மதிப்பு கூடும். உணவுவிசயத்தில் கவனம் தேவை.
கன்னி : வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும். வெளியூர் பயணம் வெற்றி தரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாகும்.
துலாம் : இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மகம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
விருச்சிகம் : தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். புதுப்பட வாய்ப்புகளும் கிடைக்கும். அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. ஆன்மீகத்தில் எண்ணம் செல்லும் ஆலயப் பயணமும் மேற்கொள்வீர்கள். ஒரு சிலர் எதிர்பார்த்த மாதிரியே தங்களுக்கு ஒரு நல்ல வரண் அமையும்.
தனுசு : இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். பஞ்சு மற்றும் நூல் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். ஒவ்வாமை ஏற்படும். ஆகையால்,உடல் நலத்தில் அக்கறை தேவை. கூட்டுத்தொழிலில் உள்ளவர்களிடம் முன்கோபத்தைத காட்ட வேண்டாம். உங்கள் உறவினரால் தங்களுக்கு முக்கியமான விசயத்திற்கு உதவி கிடைக்கும்.
மகரம் : திருமணப் பேச்சு வார்த்தை தங்களுக்கு சாதகமாக முடியும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது கிளையினை துவங்குவர். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். உடல் நலம் நன்கு மேம்படும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இன்று உங்கள் நண்பரை சந்தித்துவிடுவீர்.
கும்பம் : உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கவனமுடன் வாகனத்தை பயன்படுத்துவது நல்லது. கால், கை மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம் : புகுந்த வீட்டில் பொறுமையைக் கடைபிடிக்கவும். தம்பதிகளிடையே விட்டுக் கொடுத்துச் செல்வர். தினமும் ஓட்டலில் சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்பொழுதுதான் தங்கள் ஆரோக்கியம் மேம்படும். பழைய இரும்பு ஏலம் சம்பந்தப்பட்ட வியாபாரம் வருவாயை அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com