இன்றைய ராசிபலன் - 11.11.2024
மேஷம் : மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள்.தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். வியாபாரத்திற்கு வங்கிக் கடன் கிட்டும். வேலை தேடுபர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்.
ரிசபம் :நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். மிகவும் பொறுமை அவசியம். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள்.
மிதுனம் : காதல் கைகூடும். உறவினர்களால் நன்மை உண்டாகும். மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து சேர்ந்து விடுவர். விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள். விவசாயத்தில் மனம் நாடும். அதற்குண்டான விசயத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் வீண் அரட்டையை தவிருங்கள்.
கடகம் : இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
சிம்மம் : வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். புதிய வாகனம் வாங்கி விடும் யோகம் உண்டாகும். மருந்து வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது.
கன்னி : குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். காதலர்களுக்கு பொறுமை அவசியம்.
துலாம் : நட்பு வட்டம் விரிவடையும். அவர்களால் உயர்வு உண்டு. தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். மாணவர்கள் நன்கு படிப்பர். உறவினர்களின் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.
விருச்சிகம் ; இன்று சுறுசுறுப்புடனும் உற்சாகமுடனும் இருப்பீர்கள். உணவு விசயத்தில் வெளியிடங்களில் உண்ண வேண்டாம். பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தின் மேல் கவனம் கொள்வது நல்லது. நண்பரின் உதவி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.
தனுசு : வீடு வாங்கும் முயற்சி பலிக்கும். தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமைக்கு குறைவில்லை. உடல் உழைப்பு அதிகரிக்கும். அரசு டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும்.
மகரம் : சமூக ஆர்வலர்கள் உணர்ச்சிவயப்பட வேண்டாம். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள். அரசு தொடர்பான புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கும்பம்: வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். வெளியூர் பயணம் வெற்றிதரும். பண வரவு சீராக இருக்கும். கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். மாணவர்கள் நன்கு படிப்பர். தேகம் பொலிவு பெறும்.
மீனம் : பெற்றோரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு இட மாற்றம் உண்டாகும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வீட்டில் வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். தங்கள் மகள் அயல்நாடு செல்வார்.