இன்றைய ராசிபலன் - 15.11.2024

மேஷம் : திருமணத்திற்காக காத்திருந்த பெண்களுக்கு நல்ல வரண் அமையும். குடும்ப சொத்து சம்பந்தப்பட்ட விசயத்தில் தங்கள் குடும்பாத்துருடன் உட்கார்ந்து பேசி பங்கு பிரிப்பர். கணவர் வீட்டாருடன் மீண்டும் இணைவர். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம் : நண்பர்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் மதிப்பு கூடும். மனைவி வழி உறவினர்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பர். குலதெய்வ கோவிலுக்கு சென்றுவருவீர்கள். உடல் நலமும் முகமும் பளிச்சிடும்.
மிதுனம் : குடும்பத் தலைவிகள் தங்கள் கணவரிடம் முன் கோபத்தை காட்ட வேண்டாம். பொறுமையை கையாளவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கணவர் வீட்டார்களின் ஆதரவு கிடைக்கும். உடல் நலத்தில் முதுகுவலி வந்து போகும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை உண்டு.
கடகம் : இளம் பெண்கள் தாங்கள் வேலைக்குச் சென்று சேமித்த தொகையை ஆபரணங்களாக வாங்குவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு தங்களுடைய கணவரின் உடல் நலனை பற்றிய கவலைகள் வந்து போகும்.
சிம்மம் : சுய தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்துவர். மாமியார் மாமனார் உறவுகளில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அவர்களிடம் பொறுமையாகவும் விட்டுக்கொடுத்தும் செல்வது நல்லது. பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் சென்று படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
கன்னி : இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
துலாம் : ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும். கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர்.
விருச்சிகம் : குடும்ப தலைவிகளின் மாமியார் தங்களிடம் பாசத்துடன் நடந்து கொள்வர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த இணைய தளம் வழியாக பிரபலப்படுத்துவர்.
தனுசு : திருமணமாகாத பெண்களுக்கு தங்கள் உறவிலேயே நிச்சயம் செய்வர். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து போவர். மாணவர்களுக்கு படிப்பிலும் மற்றும் விளையாட்டு துறையிலும் மேன்மை அடைவர். கணவர் விட்டார் ஆதரவு தருவார். ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.
மகரம் : மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சித்தி, சித்தப்பா தங்களுக்கு உதவி புரிவார்.குடும்பத்துடன் வெளிநாடு செல்லும் கனவு நினைவாகும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு போட்டிகள் விலகும்.
கும்பம் : உத்யோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை குறைவாகும். குடும்பத் தலைவிகளுக்கு செலவுகள் அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கைகள் தேவை. மாமியார் மருமகள் ஒற்றுமை பலப்படும். உடல் நலன் சிறப்பாக இருக்கும்.கடனில் ஒரு பகுதியை இன்று அடைப்பீர்கள். தேகம் சிறக்கும்.
மீனம் : உத்யோகஸ்தர்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் உங்களை மெச்சுவர். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.அவர்களால் முக்கிய வேலை ஒன்று முடியும். நீண்ட நாள் கனவு நினைவாகும். உடல் நலம் சிறக்கும்.