இன்றைய ராசிபலன் - 30.01.2025!

இன்றைய ராசிபலன் - 30.01.2025!

Published on
மேஷம் : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.
ரிஷபம் : பெண்களுக்கு சளி தொந்தரவு வந்து போகும். பெரிய அளவில் பிரச்சினை இல்லை. அரசாங்க வேலை அனுகூலமாகும். வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும்.
மிதுனம் : வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவர். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உறவினர்கள் வருகை உண்டு. காதல் கண் சிமிட்டும்.
கடகம் : பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
சிம்மம் : முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதனால் வேலைச்சுமை அதிகமாகும்.
கன்னி : உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர். பயணங்களால் ஆதாயம் உண்டு. மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர்.
துலாம் : எதிரிகளின் தொல்லைகள் அகலும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர்.
விருச்சிகம் : வேலையாட்களால் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வரவேற்பு அதிகரிக்கும். காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள்.
தனுசு : நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
மகரம் : தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
கும்பம் : மாமியாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
மீனம் : கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். எதிர்காலத்திற்காக ஒரு தொகையை தங்கள் பிள்ளைகளுக்காக டெபாசிட் செய்வீர்கள். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com