இன்றைய ராசிபலன் - 31.01.2025!

மேஷம் : அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். தம்பதிகள் இணைந்து செயல்படுவர். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். வழக்கு இழுத்தடிக்கும். மாணவர்கள் விடுமுறையை கைத்தொழில் கற்க பயன்படுத்துவர்.
ரிசபம் : தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பணவரவு நன்றாக இருக்கும்.
மிதுனம் : வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
கடகம் : ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
சிம்மம் : வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். பெண்களுக்கு மதிப்பு கூடும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.
கன்னி : வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும்.
துலாம் : வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உணவு வியாபாரம் நன்கு நடைபெறும்.
விருச்சிகம் : உத்யோகத்தில் மதிப்பு கூடும். பணியாளர்களுக்கு, வேலைப்பளு இருக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சியை வெல்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவர். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் உண்மையாக இருப்பர். தம்பதிகளின் அன்பு மேலோங்கும்.
தனுசு : வியாபாரம் செழிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி நீங்கும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர்.
மகரம் : பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களை பாதுகாப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். வெளியூரிலிருந்து நற்செய்தி வந்து சேரும்.
கும்பம் : அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பர். பெண் உத்யோகஸ்தர்களை சுயமரியாதையுடன் நடத்தப்படுவர்.
மீனம் : காதலர்களுக்கு கல்யாணம் கைகூடும்.அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும். மாணவர்கள் விடுமுறையை உறவினர் வீட்டில் கழிப்பர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்ப்பார்த்த ஒரு காரியம் இனிதே நிறைவேறும்.