அளவுக்கு அதிகமான சர்க்கரையும்..ஏற்படுத்தும் ஆபத்துகளும்..எடுக்க வேண்டிய அளவும்..!
அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, இதய நோய், சில புற்றுநோய்கள், பல் சிதைவு, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA)படி, ஒரு நாளில் உண்ண வேண்டிய அதிகபட்ச சர்க்கரை அளவு:
ஆண்கள் ஒரு நாளைக்கு 150 கலோரிகள் (37.5 கிராம் அல்லது 9 டீஸ்பூன்) எடுத்துக்கொள்ளலாம்.
பெண்கள் ஒரு நாளைக்கு 100 கலோரிகள் (25 கிராம் அல்லது 6 டீஸ்பூன்) எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால், மேற்கூறிய அளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்.