மூணாறு, கேரளா: தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஒரு மலைவாசஸ்தலங்களில் ஒன்று மூணாறு. இதன் பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குளிர்ந்த காலநிலை ஆகியவற்றை ரசிப்பதற்கும், அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான இடமாகும்.
ஊட்டி, தமிழ்நாடு: பார்ப்பதற்கும், உணர்வதற்கும், அனுபவிக்கவும் ஏதுவான பச்சை கம்பளியில் படர்ந்து கிடக்கும் ஈரமலைத் தொடர்களின் சங்கிலிதான் உதகை. ஆண்டு முழுவதும் குளிர்ந்த வானிலையைக் கொண்டிருக்கும் உதகை, ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
வயநாடு, கேரளா: வயநாட்டின் வளைந்த சாலைகள் வழியாக மேற்கொள்ளும் பயணம், அடர்ந்த பசுமை மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவை சாகசத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு, மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது.
கொடைக்கானல், தமிழ்நாடு: 'மலைகளின் இளவரசி' என்று குறிப்பிடப்படும் கொடைக்கானல், பசுமையான மலைகள், அருவிகள், அழகிய ஏரிகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது.
கூர்க், கர்நாடகா: பனி மூட்டமான இயற்கைச் சூழல், பசுந்தோல் போர்த்திய மேற்கு தொடர்ச்சி மலைகள், அவற்றின் இடையே ஊர்ந்து செல்லும் நீரோடைகள் என்று இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற ஒரு இடமாக இருக்கிறது கூர்க்.
ஏற்காடு, தமிழ்நாடு: ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஏராளம்.
அகும்பே, கர்நாடகா: பசுமையான காடுகள், மின்னும் நீரோடைகள் மற்றும் சிறிய நீர்வீழ்ச்சிகள் ஆகியவை வியப்பில் ஆழ்த்தும். அதிக மழைப்பொழிவு காரணமாக, இது "தென்னிந்தியாவின் சிரபுஞ்சி" என அழைக்கப்படுகிறது.
குன்னூர், தமிழ்நாடு: மலையேறுபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடம், மனக் கவலையை மறக்க நிறைய உதவுகிறது. பரந்து விரிந்த மலைகள், நீர்வீழ்ச்சிகள் என ரசிப்பதற்கு பல கவர்ச்சிகரமான இடங்களை கொண்டுள்ளது.
பொன்முடி, கேரளா: அழகிய காடுகளும் குன்றுகளும் நிறைந்த பகுதி தான் பொன்முடி. பொன்முடி மலையேற்றத்திற்கான பிரபலமான இடமாகும். இங்கு நிலவும் காலநிலை ஆண்டு முழுவதும் இனிமையானது.
சிக்மகளூர், கர்நாடகா: இங்குள்ள பாபாபுடன் கிரி, முல்லையன்கிரி மலை, மாணிக்கதாரா அருவி அகியவை சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் இடங்களாக உள்ளன.