2025-ஆம் ஆண்டில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலாத்தலங்கள்!

மலர் பள்ளத்தாக்கு: 'பிளவர்ஸ் வேலி' என்று அழைக்கப்படும் இந்த தேசிய பூங்கா உத்தரகாண்ட் மாநிலத்தில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு செல்லும் மலையேற்ற பயணமும், அங்கு மலர்ந்திருக்கும் பூக்களும் இனிமையான இயற்கை சூழலை உணர வைக்கும்.

லடாக்: குளிர்காலத்தில் திரும்பிய இடமெல்லாம் நிலப்பரப்புகள் வெள்ளை நிறத்தில் காட்சி அளிப்பது லடாக்கின் சிறப்பு. காஷ்மீரின் அங்கமான இங்கு ஏரி நீர் உறைந்து வெண்மை திட்டாக மிளிரும்.

குல்மார்க்: சோன்மார்க், குல்மார்க் மற்றும் பஹல்காம் போன்றவை காஷ்மீரில் உள்ள சில பிரபலமான இடங்களாகும். பனிச்சறுக்கு சாகசங்களை விரும்புபவர்களுக்கு இந்த இடங்கள் மறக்கமுடியாத அனுபவத்தை பரிசளிக்கும்.

அந்தமான் மற்றும் நிக்கோபார்: கடற்கரையோரங்களில் வெயிலை மறந்து ஓய்வெடுக்க தூண்டும் காலநிலை அங்கு நிலவும். தூய்மையான கடற்கரைகள், விதவிதமான தாவரங்கள், வித்தியாசமான உயிரினங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளை திக்குமுக்காட வைத்துவிடும்.

கூர்க்: கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கூர்க் பனி மூட்டமான இயற்கைச் சூழல், பசுந்தோல் போர்த்திய மேற்கு தொடர்ச்சி மலைகள், அவற்றின் இடையே ஊர்ந்து செல்லும் நீரோடைகள் என்று இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற ஒரு இடமாக உள்ளது

கோவா: இளைஞர்களின் கனவு தேசமான கோவா இந்தியாவில் இருந்தாலும் வெளிநாட்டில் இருப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. இங்குள்ள அழகிய கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அனைவராலும் விரும்பக்கூடிய இடமாக திகழ்கிறது.

மூணாறு: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். பசுமை பள்ளத்தாக்கு போல் பரந்து காணப்படும் இடுக்கி மாவட்டம் உண்மையில் ரசிப்பதற்கு உகந்த இடமாகும்.

கொடைக்கானல்: 'மலைகளின் இளவரசி என கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு ரோஜா பூங்கா, பைன்மரக்காடு, வெள்ளி நீர்வீழ்ச்சி, குணா குகை என ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.