பானாசுர சாகர் அணை : இது இந்தியாவின் மிகப்பெரிய அணை எனக் குறிப்பிடப்படுகிறது. இங்கு நீர்த்தேக்கங்களால் சூழப்பட்ட தீவு போன்ற பகுதிகளாக காட்சியளிக்கும்.
எடக்கல் குகைகள் : வயநாடு சுற்றுலாவில் கட்டாயம் கண்டு ரசிக்க வேண்டிய இடங்களில் இந்த எடக்கல் குகைகலும் ஒன்று. 7000 ஆண்டுகள் பழமையான இந்த குகைகளில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.
செம்பரா சிகரம் : சாகச பிரியர்கள் விரும்பும் இடமாக இது உள்ளது. செம்பரா சிகரம் உயரமான சிகரமாக பார்க்கப்படுகிறது. மலையில் உச்சியில் இருந்தால் மொத்த வயநாடும் கண்களுக்கு தெரியும்.
மீன் முட்டி நீர்வீழ்ச்சி : மீன் முட்டி நீர்வீழ்ச்சியை ரசிக்க ஒருநாள் போதாது. குளித்து விளையாடி மகிழலாம், புகைப்படமும் எடுக்கலாம்.
நீலிமலை : இது மலையேறுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு இடமாகும். நீலிமலை உச்சியிலிருந்து மீன்முட்டி அருவிகள் மற்றும் அருகிலுள்ள பள்ளத்தாக்குகளைக் காண்பது சிலிர்ப்பூட்டும் காட்சிகளாகும்.