2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்...அதிரடி அறிவிப்புகள்!

கிசான் கடன் அட்டை மூலம் வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை 3 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுகிறது
நாட்டில் உள்ள 5 இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பாட்னாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் விரிவுபடுத்தப்படும்
மருத்துவப்படிப்பில் அடுத்த ஆண்டு 10 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மருத்தவப்படிப்பில் 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
ரூ. 500 கோடியில் செயற்கை நுண்ணறிவு கல்வி மையங்கள் அமைக்கப்படும்
தாய்மொழியில் மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும்
வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக அதிகரிப்பு
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
லித்தியம் பேட்டரிக்கு சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது என நிதி மந்திரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.