விஜயதசமி கொண்டாட்டம்

விஜயதசமி தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு கல்வி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு குழந்தைகளை அழைத்து வந்தனர்.
எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளை நெல்மணியில் 'அ' எழுத்தை எழுத வைத்தனர்.
விஜயதசமியை முன்னிட்டு அம்மன் அம்பு போடும் நிகழ்ச்சிக்காக சிகப்பு குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோப்பு மகா மாரியம்மன்
ஓரியூர் மட்டுவார் குழலி அம்மன் சமேத சேயுமானார் கோவிலில் விஜயதசமி தினத்தை யொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாகை அமர நந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஞானசரஸ்வதி
போடி அருள்மிகு ஸ்ரீ நிவாச பெருமாள் கோவிலில் விஜயதசமி முன்னிட்டு லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு சிறப்பு செய்யப்பட்டிருந்த அலங்காரம்
விஜயதசமி விடுமுறை நாளை முன்னிட்டு வேலூர் கோட்டையை சுற்றி பார்ப்பதற்காக குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
விஜயதசமியை முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற மகர் நோன்பு திருவிழா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா
குலசை தசரா குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூல் செய்தனர்
அம்பு எய்தல் நிகழ்ச்சி
நவராத்திரி திருவிழாவில் நிறைவு நாளில் கோவில்களில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி மதுரை தெற்குமாசி வீதி காமாட்சியம்மன் கிருஷ்ணாபுரம் காலனியில் கோகணேஸ்வரர் கோவில் அம்மன், இம்மையில் நன்மை தருவார் கோவிலில் மத்தியபுரி அம்மன் அம்பு எய்தல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தனர்.