2006- அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட பொங்கல் சிறப்பு தபால்தலையை பெற்றுக்கொண்டவர், நடிகர் விஜய்.
2009- ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.
2011- "சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்" என்றார், எஸ்ஏசி.
2017- ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். மேலும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
2020- கட்சியை தொடங்குவதாக எஸ்.ஏ.சி அறிவித்த நிலையில் அதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்றார், விஜய்.
2021- உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சந்தித்தார், விஜய்.
2023- தொகுதி வாரியாக 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
2023- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
2024- தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார்.