'அதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்' - நடிகை அனுபமா
@anupamaparameswaran96
பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபமா.
இவர் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
தமிழில் கொடி, சைரன், தள்ளிப்போகாதே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
@anupamaparameswaran96
இந்த நிலையில் அனுபமா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது :- 'கதாநாயகியாக விதம்விதமான கதாபாத்திரங்களில் நடிப்பது வேறு. வில்லியாக நடிப்பது வேறு.
@anupamaparameswaran96
எனக்கு ஒரு படத்திலேனும் முழுமையான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
வில்லியாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற வேண்டும் என்பது எனது கனவு.வில்லி வாய்ப்பு எந்த மொழி படத்தில் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். அதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்' என்றார்.