இயற்கையை ரசிக்க வேண்டுமா? கேரளாவிற்கு ஒரு ட்ரிப் போடுங்க!
ஆலப்புழா: இங்கு கால்வாய்கள், ஆறுகள் மற்றும் ஏரிகள் என நீர்நிலைகள் பல நிறைந்துள்ளன. படகுகள் மூலம் இயற்கையை ரசிக்க வேண்டும் என்றால் ஆலப்புழா நல்ல தேர்வாக அமையும்.
கொச்சி: இது கேரளாவின் பொருளாதார தலைநகரம் ஆகும். இங்கு சீன மீன்பிடி வலைகள் முதல் மசாலா சாகுபடி வரை ஒவ்வொரு மூலையிலும் ஒரு ஆச்சரியம் நிறைந்துள்ளது.
மூணாறு: கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை போர்த்திய போர்வை போன்று உள்ள மலைகள், நம்மை வருடிச் செல்லும் பனிப் பொழிவு என நமது கண்களுக்கு விருந்தாக அமையும் இடமாகும்.
கோவளம்: இங்கு மிக அழகான கடற்கரை மற்றும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பசுமை நிறைந்த தென்னை மரங்கள், தாவரங்கள் மற்றும் ரிசார்ட்டுகள் உள்ளன.
வயநாடு: இது ஒரு மலைப்பகுதி ஆகும். மேலும் இங்கு தேயிலை, ஏலக்காய், மிளகு போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பல நீர்வீழ்ச்சிகள், குகைகள் மற்றும் ஏரிகள் போன்ற இயற்கை நிறைந்த பகுதியாகும்
கோழிக்கோடு: இது மீன்பிடி துறைமுகம் மற்றும் கப்பல் கட்டுதல் ஆகியவற்றிற்கு பிரபலமானது. இங்கு வனவிலங்கு சரணாலயம், ஆறுகள் மற்றும் மலைகள் என இயற்கை நிறைந்த சுற்றுலாத்தலமாகும்.
திருச்சூர்:இது கேரளா கலாச்சாரத்தின் தலைநகரமாக கருதப்படுகிறது. இங்கு கோவில்கள், தேவாலயங்கள் என பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன.