சுவையான கேஎப்சி ஸ்டைல் சிக்கன் செய்யணுமா?

all photo using metaAI
சிக்கன் லெக் பீஸ் – 4 ,பூண்டு பேஸ்ட் – சிறிதளவு, உப்பு – சிறிதளவு, தயிர் – தேவையான அளவு, மைதா – 100 கிராம், மிளகுத்தூள் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – சிறிதளவு, முட்டை ,கார்ன் மீல்ஸ் – 100 கிராம் ஆகியவை.
ஒரு பவுலில் தயிரை ஊற்றி அதில் தண்ணீர் சேர்த்து மோர் போன்று தயார் செய்யவும்.
பின் அதில் மைதாவினை சேர்த்து அதனுடன் பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் சிக்கனை போட்டு அதனை அப்படியே 2 மணிநேரம் வரை ஊறவைக்கவும்.
பிறகு ஒரு தட்டில் மைதா, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கார்ன் மீல்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு மற்றொரு பவுலில் முட்டையை உடைத்து நன்றாக கலக்கவும்.
பிறகு ஊற வைத்த சிக்கனை இந்த முட்டையில் நனைத்து, கலந்து வைத்த மாவில் உருட்டி மீண்டும் முட்டையில் நனைத்து அதனை வேறொரு தட்டில் வைக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தயார் செய்த சிக்கனை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான K F C பாணியில் சிக்கன் தயார்.
Explore