கண்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கான வழிமுறைகள்..!
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களை உபயோகிக்கும் நேரத்தை குறைப்பதன் மூலம் கண்கள் சோர்வடைவதை தடுக்கலாம்.
இரவு போதுமான அளவு தூங்குவதன் மூலம் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலம் கண்களில் மாகுலர் சிதைவை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதன் மூலம் கண்களில் தூசி படாமல் பாதுகாக்கலாம்.
புகை பிடிப்பதை நிறுத்துவதன் மூலம் கண்களில் மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சூரிய ஒளியில் இருந்து கண்களைப் பாதுகாப்பதற்கு சன்கிளாஸைப் பயன்படுத்தலாம்.