வெப்பப் பக்கவாதத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகள்..!

வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கடுமையான நோய்களில் இதுவும் ஒன்றாகும். இது மூளையே வெகுவாகப் பாதிப்புள்ளாக்கி, தன்நினைவை இழக்க நேரிடும். இதையே வெப்பப் பக்கவாதம் என்கிறோம்.
தடுக்கும் வழிமுறைகள்

அதிக வெயில் நேரங்களில், வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும்
காலையில் எழுந்தவுடன் நீர் ஆகாரம் எடுத்துக் கொள்ளலாம், இதனோடு சிறிது வெங்காயம் சேர்த்துக் கொள்வது நல்லது.
மோர் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
குளிர்ச்சியைக் கொடுக்கும் இளநீர், நுங்கு ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 2-3 முறை குளிக்கலாம்
நிறையப் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம்.
வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை அணியலாம்.