வெயில் காலத்தில் பாடாய்ப்படுத்தும் வியர்க்குருவை தடுப்பதற்கான வழிமுறைகள்..!

கிராமத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பனை நுங்கு மிகமிகச் சிறந்த மருந்து.
வேப்பிலை, சந்தனம், மஞ்சள் இந்த மூன்றுமே வியர்க்குருவுக்கு மிகச் சிறந்த கிருமி நாசினி மருந்தாக விளங்குகிறது.
இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம் போன்றவை வியர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவும்.
வெயில் காலத்தில், வழக்கமாக குடிப்பதைவிட, சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
முடிந்தவரை வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான இடத்தில் இருக்கப் பழகுங்கள்.
பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்தவும்.
வியர்க்குரு இருக்கும் இடத்தில் கற்றாழைச் சாறு தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி, வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் தடவினால், எரிச்சல், அரிப்பு குறைந்துவிடும்.