மாதவிடாய் வலியை குறைப்பதற்கான வழிமுறைகள்..!
நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் வைத்து அடிவயிற்றில் மசாஜ் செய்வதன் மூலம் மாதவிடாய் வலியைக் குணப்படுத்த முடியும்.
கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாறை வடிகட்டி மாதவிடாய் காலத்தில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் சாப்பிடும்போது வலி குறையும்.
வெந்தயம், பூண்டு மற்றும் பெருஞ்சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் வலிக்கு சிறந்த தீர்வாக அமையும்.
மாதவிடாய் காலத்தில் சுடு தண்ணீரை கொண்டு அடிவயிற்றில் ஒத்தனம் கொடுப்பதன் மூலம் வலியில் இருந்து விடுபடலாம்.
மாதவிடாய் காலத்தில் காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.