மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள்..!
விட்டியில் தேவையற்ற நேரங்களில் ஒளிரும் மின் விளக்குகள்,மின் விசிறிகள் போன்றவற்றை அவ்வப்போது அணைத்து விட வேண்டும்.
மஞ்சள் நிற பல்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து,டியூப் லைட் பயன்படுத்துவதால் மின்சாரத்தை கட்டுப்படுத்தலாம்.
வெளிச்சமான அறைகள் கொண்ட வீடுகள் கட்ட வேண்டும்.இதனால் பகல் நேரங்களில் மின் விளக்குகள் போடுவதை தவிர்க்கலாம்.
சுவர்களில் வண்ணம் அடிக்கும் பொது அடர்த்தி குறைந்த நிறங்களை தேர்வு செய்ய வேண்டும்.
பிரிட்ஜ்களில் அதிகமான பொருட்கள் இருப்பதன் மூலம் குளிர் தன்மையை நீண்ட நேரம் பாதுகாத்து மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துகிறது.
இன்டெக்ஸான் ஸ்டவ்களை பயன்படுத்தும் பொது அடிப்பாகம் அகலமான பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரம் வீணாவதை தடுக்கலாம்
மின் விசிறிகளையும்,டியூப் லைட்களையும் அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.