பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன...?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காயை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துகிறது.
குளிர்காலம் மற்றும் வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை அழகாக காட்டுவதற்கு உதவுகிறது.மேலும் தோல் சுருக்கத்தை குறைத்து வயதானத தோற்றத்தைத் தடுக்கிறது.
இதில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து இருப்பதால் கண்பார்வை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.
மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
இவை பருவ கால தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது.மேலும் நச்சுநீக்கும் பண்புகள் கொண்டுள்ளது.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமான பிரச்சனைகளுக்கு உதவியாக உள்ளது.