லிச்சி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
லிச்சி பழம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
இது ரத்த அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகை செய்கிறது.
லிச்சியின் விதைகளில் அல்சைமர் நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் நிறைந்துள்ளது.
உடல் எடையை சீராக வைத்துகொள்ள லிச்சி உதவக்கூடும்.
இதில் இருக்கும் பாலிபினால், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கும் திறன் கொண்டது.
லிச்சி பழத்தில் உள்ள பிளாவனாய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்.
லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.