ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

வால்நட்டில் அதிக அளவில் பயோட்டின் என்னும் வைட்டமின் பி7 நிறைந்துள்ளது. இது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வால்நட் நார்ச்சத்தின் மூலமாகும். இது ஆரோக்கியமான ​எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
வால்நட்டில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
ஊறவைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதன் மூலம் பித்தப்பை கற்கள் படிப்படியாக கரையக்கூடும்.
தினமும் ஊறவைத்த வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினை குறையக்கூடும்.
சருமத்தில் ஏற்படும் சருமச் சுருக்கத்தைப் போக்கக் கூடிய ஆற்றல் வால்நட்டில் நிறைந்துள்ளது.
ஊறவைத்த வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை பிரச்சினை நீங்கி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
வால்நட்டில் உள்ள புரதச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள், மூளையின் ஆற்றலை நன்றாக செயல்படத் தூண்டுகிறது.
தினமும் ஊறவைத்த வால்நட்ஸை பெண்கள் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.