பற்கள் நிறம் மாறுவதற்கான காரணங்கள் என்னென்ன ?
பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவதுதான் பற்களின் நிறமாற்றத்துக்கு முக்கியக் காரணமாகும்.
புகைப்பழக்கம், வெற்றிலை, பாக்கு போன்றவை பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு பற்களின் நிறம் மாறுகிறது.
இனிப்புப் பண்டங்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் நிறமாற்றம் ஏற்படுகிறது.
அடிக்கடி குளிர்பானங்கள் அருந்துவது பற்களின் நிறமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
காபியில் உள்ள ‘டானின்’ ரசாயனம் நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
சாஸ், வினிகர் போன்றவை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது பற்களின் நிறம் மாறலாம்.