வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது?
வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கெட்ட கிருமி, நாக்கில் சேருவதால் வாய் நாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.
வாய் உலர்ந்து போதல்,வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாகும்.
மூக்கின் வழியாக சுவாசிக்காமல்,வாய் வழியாக சுவாசிப்பதனால் துர்நாற்றம் ஏற்படும்.
சிகரெட், சுருட்டு, பீடி, மூக்குப்பொடி முதலியவைகளை உபயோகிப்பவர்களுக்கு பற்களில் கறை படிந்து துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாகி வாய் துர்நாற்றத்தை உண்டுபண்ணலாம்.