ஏப்பம் அடிக்கடி வர காரணம் என்ன?
ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும்.
இது சாதாரணமானது என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது பிரச்சனையாக மாறிவிடும்.
ஏப்பம் வர காரணங்கள் : சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால், உடலில் உணவுக்கான இடத்தை காற்று நிரப்பிவிடுகிறது. இதனாலும் ஏப்பம் அடிக்கடி வரும்.
பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும் ஏப்பத்தை ஏற்படுத்துகிறது.
அடிக்கடி கொழுப்பு நிறந்த உணவுகளான எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் ஏப்பம் ஏற்படக்கூடும்.
சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிடும்போது அதிக காற்று உள்ளே சென்று விடுகிறது. இது ஏப்பத்தை உண்டாக்கும்.