அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதற்கான காரணம் என்னவாயிருக்கும்..?
காரணங்கள் : சிறுநீர் தொற்று பிரச்சினை காரணமாக வரக்கூடும்.
புரோஸ்ட்ரேட் பிரச்சினைகள் காரணமாக வரலாம்.
மனநல பிரச்சினைகளுக்காக பரிந்துரைக்கப்படும் லித்தியம் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் வரலாம்.
டயாபட்டிஸ் இன்சிபிடஸ் பிரச்சினை காரணமாக வரலாம்.
அதிகமான அளவு மது அல்லது காபி அருந்துவதால் வரக்கூடும்
சைக்கோஜெனிக் பாலிடிப்சியா- தாகம் இல்லாவிட்டாலும் அதிகமாக தண்ணீர் குடித்தல்.
குஷிங் சின்ட்ரோம் பிரச்சினையினால் வரலாம்.
ஹைபர்கேல்சீமியா- ரத்தத்தில் அதிகமான அளவு கால்சியம் இருக்கும் நிலை காரணமாகலாம்.
சிறுநீரகப் பிரச்சினை தீர, மருத்துவரை கலந்தாலோசித்து சிறுநீர் அடிக்கடி கழிப்பதற்கு, இந்த பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்று காரணமா என்பதை பரிசோதனை செய்து தீர்வு காணலாம்.