‘5-ஜி’ சேவையில் என்ன சிறப்பு? தெரிந்து கொள்வோம்..
5-ஜி தொலை தொடர்புச்சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.
5-ஜி சேவை, அதிவேக இணைப்பினை ஏற்படுத்தித்தரும்.
அதிக நம்பகத்தன்மை, அதிக நெட்வொர்க் திறன் கொண்டிருக்கும்.
4-ஜி தொலைதொடர்புச் சேவையின் இணையதள வேகத்தைவிட இந்த 5-ஜி தொலைதொடர்புச்சேவை இணையதள வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும்
இணைய வேகம் மட்டுமல்ல, தரவு பரிமாற்றம் தொடங்குவதற்கு முன்பாக சில வினாடிகள் தாமதம் ஏற்படும். இது ‘லேட்டன்சி’ எனப்படும். 5-ஜியில் இந்த தாமதம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
உங்கள் செல்போனில் 5ஜி திறன் இருக்கிறதா என்பதை விசாரித்து அறியுங்கள். அந்த திறன் இருந்தால் புதிய 5-ஜி செல்போன் வாங்க வேண்டியதில்லை.
புதிய சிம்கார்டு வாங்கத் தேவை இருக்காது.
எதிர்காலத்தை 5-ஜி தொழில்நுட்பத்தை விவசாயம், நவீன விவசாயத்துக்கு பயன்படுத்தலாம்.
ஆர்.எப்.ஐ.டி. சென்சார்கள் மற்றும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் ஆடு, மாடுகளின் இருப்பிடத்தைக் கண்காணித்து எளிதாக நிர்வகிக்க முடியும்.
நவீன அறுவை சிகிச்சைகளை செய்வதில் டாக்டர்களுக்கு இந்த 5-ஜி தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.
எல்லாம் சரி, கட்டணம் எவ்வளவு என்கிறீர்களா?
5-ஜி கட்டண விவரத்தை இன்னும் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. ஆனால் 4-ஜியை விட 5-ஜிக்கு அதிக கட்டணம் செலவிட வேண்டியதிருக்கும்.