இரவு சாப்பிட ஏற்ற நேரம் எது? இரவு 7 மணி அல்லது 9 மணி?

metaAI
இரவு 7 மணி அளவில் சாப்பிடும்போது அந்த உணவு செரிமானம் செய்வதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். கொழுப்பையும் சரி செய்து அதிக கொழுப்பை எரிக்க வாய்ப்பு கிடைக்கும்.
metaAI
தூங்க ஆரம்பிக்கும்போது செரிமான செயல்பாடு முடிவடைந்துவிடும் என்பதால் உடலுக்கு போதுமான ஓய்வு நேரம் கிடைக்கும். அதனால் இடையூறு இன்றி ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.
metaAI
இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணி வரை நீண்ட இடைவெளி கிடைப்பதால் கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
metaAI
இரவு தாமதமாக 9 மணிக்கோ அதற்கு பிறகோ சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் மெதுவாக நடப்பதற்கு வழிவகுப்பதோடு கூடுதல் பசி உணர்வையும் உருவாக்கி விடும். அதனால் அதிகம் சாப்பிட நேரிடும்.
metaAI
அதிலும் இரவில் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், உட்கொண்டுவிட்டு உடனே தூங்க சென்றால் உடலுக்கு அந்த உணவை ஜீரணிக்க போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை.
metaAI
செரிமான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தி தூக்கத்தையும் பாதிக்கும். உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிவிடும்.
metaAI
Explore