குழந்தை வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டியவை..!

கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களில் இருந்து தாயையும், சேயையும் பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.
metaAI
வாழைப்பழம்: இதில் பொட்டாசியம் நிறைந்திருக்கும். வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளடங்கி இருக்கும். வைட்டமின் பி6 குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
சிட்ரஸ் பழங்கள்: இவை கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்மை பயக்கும். எலுமிச்சை, நெல்லிக்காய், கிவி, அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்ப பெற்றிருக்கும். கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் சி நல்லது.
அவகேடோ: இந்த பழத்தில் அதிகளவில் போலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது கர்ப்ப காலத்தில் காலில் ஏற்படும் தசை பிடிப்புகளை கட்டுப்படுத்த உதவும்.
ஆப்பிள்: நார்ச்சத்துள்ள இந்த பழம் அதிக அளவு வைட்டமின் சியையும் கொண்டுள்ளது. இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
தர்பூசணி: தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி, பி6, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் நெஞ்செரிச்சல், கை, கால்களில் உண்டாகும் வீக்கம் போன்றவற்றை தணிக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
வெள்ளரி: நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது கர்ப்பிணிப் பெண்களிடத்தில் நீரிழப்பை தடுக்க உதவும்.
தக்காளி: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசிய தேவையான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, போலிக் அமிலம் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.
கத்திரிக்காய்: கத்தரிக்காயும் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது. இருப்பினும், அளவோடு சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.கத்திரிக்காய் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியது.
Explore