தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்?

செம்பருத்திப் பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்குத் தடவி வர தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
சிறிது அருகம்புல் சாறு, கரிசலாங்கண்ணி சாறு, சிறிதளவு கார்போகி அரிசி ஆகியவற்றை நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சித் தலைக்கு தேய்த்து வர முடி வளரும்.
வெள்ளைப் பூவுடைய கரிசலாங்கண்ணி இலையை அரைத்து அடையாகத் தட்டி காயவைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் ஊற வைத்து தலைக்குத் தேய்த்தால் முடி கறுத்து, செழித்து வளரும்.
கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. அது தலைமுடி நீளமாக வளர மற்றும் பளபளப்பாக காட்சி தருவதற்கும் வழிவகுக்கும்.
நெல்லிக்காய் பல்வேறு விதமான மருத்துவ குணங்களை கொண்டது. மேலும் இதில் உள்ள கொலோஜன் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்வதற்கு உதவும்.
வெந்தயத்தை தண்ணீர்விட்டு அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள். அடிக்கடி பயன்படுத்திவர, முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும்.
ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
கீரைசூப், காய்கறி சூப், கேரட் சாறு இவைகளை அடிக்கடி சாப்பிடுவர தலைமுடி நன்கு வளரும்.
மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துகொள்ளுங்கள். இதனை தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.