பெண்களை அதிகம் பாதிக்கும் ரத்த சோகை ?

ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் கூறுவர். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவாகும். யாரை எல்லாம் அதிகம் பாதிக்கும்?
மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு உள்ளவர்களை பாதிக்க நேரிடும்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் சந்திக்கக்கூடும்.
வைட்டமின், இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் சந்திக்கலாம்.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும்.
ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் ஏற்படுகிறது.
மருந்து, மாத்திரைகள் அதிகமாக எடுப்பவர்களுக்கு ஏற்படக்கூடும்.
ரத்த சோகை தவிர்க்க : இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு வகைகள், சோயா பன்னீர், பச்சை நிறக் காய்கறிகள், மாதுளைப் பழம், முருங்கைக் கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆகிய உணவுகளை சாப்பிடவும்.
Explore