யாரெல்லாம் ரத்த தானம் செய்ய முடியாது?
கடந்த ஓராண்டுக்குள் பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக்கொண்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
மூன்று மாதத்திற்கு முன் மலேரியாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
உடலில் பச்சை குத்தியவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது.
புற்றுநோய் பாதித்தவர்கள், இதய நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
பல் மருத்துவ சிகிச்சை எடுத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரத்த தானம் செய்யக் கூடாது.