குழந்தைகள் 50 கிராம் முதல் 75 கிராம் வரை நாவல் பழத்தை உட்கொள்ளலாம். அதேவேளையில் அவர்களுக்கு ஒவ்வாமையோ, செரிமான பிரச்சினைகளோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியமானது.
மற்றவர்கள் சுமார் 100 கிராம் முதல் 150 கிராம் நாவல் பழம் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் தினமும் 50 முதல் 100 கிராம் வரை சாப்பிடலாம்.
இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் உதவும்.
இரைப்பை குடல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஏனெனில் நாவல் பழத்தில் ஆக்சலேட்டுகள் உள்ளன. அதனை அதிக அளவில் உட்கொண்டால் சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.