யாரெல்லாம் ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்?
சர்க்கரை நோயை (நீரிழிவு நோய்) ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதற்கு ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் (ஓ.ஜி. டி.டி) பரிசோதனை செய்ய வேண்டும்.
40 வயதை கடந்தவர்கள்.
நீரிழிவு நோய் உள்ள குடும்ப பாரம்பரியத்தில் பிறந்தவர்கள்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்.
உயர் ரத்த கொலஸ்ட்ரால் உள்ளவர்.
உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்பவர்கள்.
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.
அதிக எடை உள்ள குழந்தை பெற்றெடுத்தவர்கள்.