எரிமலை (Volcano) ஏன் வெடிக்கிறது ?

பூமி பார்க்க அமைதியாக இருந்தாலும், அதுக்குள்ள ஒரு பெரிய நெருப்புக்கடலே கொதித்துக்கொண்டு இருக்கிறது. திடீர் என்று ஒரு நாள் அந்த நெருப்பு ஏன் மலையை பிளந்துகொண்டு வெளிய வருகிறது?
பூமியை தோண்ட தோண்ட வெப்பத்தின் அளவு அதிகமா இருக்கும் அதாவது (சுமார் 1000°C -க்கு மேல்)
அந்த வெப்பத்தின் காரணமாக பாறைகள் எல்லாம் உருகி, "மேக்மா" (Magma) என்கிற நெருப்புக் கூலாக மாறிவிடும். இது லேசாக இருப்பதால், மெதுவா மேல் நோக்கி வர முயற்சிக்கும்.
இந்த மேக்மா கூடவே நீராவி மற்றும் பல வாயுக்களும் (Gases) கலந்து இருக்கும். ஒரு சோடா பாட்டிலை நல்லா குலுக்கிட்டுத் திறந்தால் என்ன ஆகும்? கேஸ் எல்லாம் பொங்கி வெளிய வரும்?
அதேபோல்தான் இங்கயும் வரும்! பூமிக்கு அடியில் இடமில்லாமல் இந்த வாயுக்கள் பயங்கரமான அழுத்தத்தை (Pressure) உருவாக்கும்.
இந்த அழுத்தம் தாங்க முடியாமல் போகும்போது, பூமியின் மேற்பரப்பில் எங்கெல்லாம் விரிசல் (Weak Spot) இருக்கிறதோ, அங்கு உடைத்துக்கொண்டு அந்த நெருப்புக்குழம்பு பீய்ச்சி அடிக்கும்! இதுதான் எரிமலை வெடிப்பு!
மேக்மாவுக்கும் லாவாவுக்கும் என்ன வித்தியாசம்? பூமிக்கு உள்ளே இருக்கும் வரை அதுக்கு பேரு "மேக்மா".
வெடிச்சு பூமிக்கு வெளியே வந்தால் அதுக்கு பேரு "லாவா". பெயர் தான் வேறு, ஆனால் இரண்டும் ஒன்றுதான்!
Explore