பழங்களின் நிறங்களை பொறுத்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாறுபடும். அவற்றுள் சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி: போலேட், போலிக் அமிலம் நிறைந் திருக்கும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
செர்ரி: இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகியவையும் நிறைந்துள்ளது.
தர்பூசணி: இது 92 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வெப்பமான கோடை நாட்களில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இது சிறந்த தேர்வாக அமையும்.
மாதுளை: இந்த பழத்தில் பாலிபினால்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்கக்கூடியவை.
கிரேப் புரூட்: இளஞ்சிவப்பு நிற கிரேப் புரூட் பழத்தில் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
ஆப்பிள்: இதில் பாலிபீனால்கள், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. ஒருவர் அதிக பாலி பீனால்கள் மற்றும் நார்ச்சத்து பெற விரும்பினால், ஆப்பிள் சிறந்த தேர்வாகும்.
திராட்சை: இதில் வைட்டமின் பி, ஏ மற்றும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. இவற்றில் லுடீன், ஜியாசாந்தைன் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன.
பிளம்ஸ்: இந்த பழத்தில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன.
தக்காளிப்பழம்: இதில் அதிக அளவில் லைகோபீன் இருப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோயில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.