சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜாக்கிங் ஏன் அவசியம்..?
நோயற்ற வாழ்வே..குறையற்ற செல்வம்..என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு தினமும் ஒரு மணி நேரம் ஜாக்கிங் (ஒட்டப்பயிற்சி )செய்தாலே போதும் என நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது.
கால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கிறது. இதனால் தசைநார்கள் வலிமை பெறுகின்றன.
ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள கால்சியம், எலும்புகளை வலுவாக்குகிறது.
ஜாக்கிங் செய்யும்போது மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயனங்கள் சுரக்கிறது. இதனால், மனநலம் மேம்படுகிறது.
ஜாக்கிங் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், தொற்றுவியாதிகள் எளிதில் பாதிக்காது.
ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்து ரத்த ஓட்டத்தை சீராகப் பாய வழிவகுக்கிறது.
ஜாக்கிங் செய்வதன் மூலம் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் மேம்படுகிறது. இது ஆஸ்துமா பிரச்சினைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
தினமும் ஜாக்கிங் செய்வதால், உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, பிட்டான தோற்றம் கிடைக்கிறது.