டயாபட்டீஸ் வந்த உடனே கண்பார்வை பறிபோகுமா?

நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் வரும் பிரச்சினைகள் கண்பார்வை பறிபோதல், கால் மரத்துப்போதல் போன்றவைகள் ஆகும்.
உடனே பறிபோகும் என்பது தவறானது. நாள்பட்ட டயாபட்டீஸ்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது.
10, 20 வருடங்கள் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதபோதுதான் இதுபோன்ற பிரச்சினைகள் வரும்.
குறிப்பாக, 20 வருடங்கள் கழித்து ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக், ரெட்டினா பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, கால் புண் என எது வேண்டுமானாலும் திடீரென வரலாம்.
சர்க்கரை அதிகரிக்கும்போது இந்த உறுப்புகள் மட்டுமல்லாமல் கல்லீரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதாவது சுகர் அதிகமாக இருக்கும்போது கொழுப்பு அதிகரித்து அது கல்லீரலில் சென்று சேரும். இதுதான் ஃபேட்டி லிவர் பிரச்சினைக்கு காரணமாகிறது.
மது அல்லாத கொழுப்பு கல்லீரல் பிரச்சினையானது கல்லீரல் செயலிழப்பு வரை கொண்டுசெல்லும்.
Explore